அச்சகத்திற்கு நிலுவையில் இருந்த கடனை முழுமையாக செலுத்தி முடித்தது பாஸ் கட்சி!

கோலாலம்பூர், மார்ச் 15 –

கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ஹாராகா வை அச்சடித்து தந்திருந்த முன்னாள் அச்சகத்திற்கு வழங்க வேண்டியிருந்த 659 ஆயிரம் ரிங்கிட் தொகையை, நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப, பாஸ் கட்சி முழுமையாக செலுத்தியுள்ளது.NAJ Press Resources எனும் அச்சக நிறுவனத்தின் வழக்கறிஞரிடம் அந்த தொகைக்கான காசோலை கடந்த மார்ச் 7ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலுவையிலுள்ள தொகையை பாஸ் கட்சி செலுத்த தவறியதை அடுத்து அதற்கு எதிராக சம்பந்தப்பட்ட அச்சகம் இதற்கு முன்பு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி, கோலாலம்பூர் செக்‌ஷென் நீதிமன்றம், பாஸ் கட்சியும் இதர இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட அச்சகத்திற்கு 656 ஆயிரத்து 233 ரிங்கிட் 69 சென் – யை செலுத்தும்படி உத்தரவிட்டது.

எனினும், அத்தீர்ப்புக்கு எதிராக பாஸ் கட்சி அதே மாதம் 14ஆம் தேதி மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், பாஸ் கட்சி நிலுவையில் இருந்த முழுதொகையையும் செலுத்தியுள்ளதை உறுதிபடுத்திய அச்சகத்தின் வழக்கறிஞர், மேல்முறையீட்டையும் அக்கட்சி மீட்டுக்கொண்டுள்ளதாக கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்