அச்சுறுத்தலுக்குறிய செயல்களுக்கு அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சி செய்பவர்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இதுப்போன்ற ஒழுக்கமற்ற செயல்களை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடப்பு அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியினர் செய்யக் கூடாது என்று தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து பேசுவதற்கு அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களுக்கு மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை வழங்கப்படவில்லை என்று ஃபாமி ஃபட்சில் விளக்கினார்.

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் – கின் வீட்டின் அஞ்சல் பெட்டியில் நேற்று இரண்டு தோட்டாக்கள் உட்பட ஒரு மிரட்டல் கடிதம் கண்டறியப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஃபாமி ஃபட்சில் கருத்து தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்