அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து பெண் தற்கொலை

நேற்று மதியம் 3 மணியளவில் தாமான் ஶ்ரீ கோம்பாக்கில் உள்ள அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து ஒரு வாலிப பெண் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். 20 வயதுடைய அந்த பெண் அடுக்குமாடி வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என செலயாங் வட்டார தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கை கொமண்டர் அலியாஸ் பின் டொல்லா தெரிவித்தார். இருப்பினும் இந்தச் சம்பவத்திற்கான முழுக் காரணத்தை அறிவதற்காகவும் முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காகவும் அந்த இளம் பெண்ணின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்