அதிகரிக்கும் கடல் நீர்மட்டம், பாங்காங்கின் தலைநகர் அந்தஸ்தை பறிக்குமா?

தாய்லாந்து, மே 18-

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்காக் நகரம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. பரபரப்பான தாய்லாந்தின் தலைநகரம் ஏற்கனவே மழைக்காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலையில், அதிகரித்து வரும் கடல் நீர்மட்டம் மற்றுமொரு பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  

கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவது, தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கை அச்சுறுத்துகிறது என்று நாட்டின் காலநிலை மாற்ற அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டு தலைநகரை மாற்றுவது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்தோனேசியா தனது தலைநகரான ஜகார்த்தாவை விட்டு விலகி, நுசந்தாராவை தலைநகராக மாற்றவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டாலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய தலைநகர மாற்றம் நடைபெறும்  இந்தோனேசியாவைப் போலவே, தாய்லாந்தும் தனது தலைநகரை மாற்றும் காலம் வெகுதூரம் இல்லை என்று கருதப்படுகிறது. ஏனென்றால், தாய்லாந்து தலைநகர் பாங்காங், கடல் நீர்மட்டம் உயர்வதால் அழிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

மழைக்காலத்தில் ஏற்கனவே படும் பிரச்சனைகளை பார்க்கும்போது, தாய்லாந்து அரசு தலைநகரை மாற்றும் முடிவை விரைவில் எடுத்துவிடும் என்று மக்கள் கருதுகின்றனர்.மழைக்காலத்தில் கடலுக்கு வந்து சேரும் அதிகப்படியான நீர் ஏற்படுத்தும் பிரச்சனையால் பாங்காக் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது வழக்கமாகிவிட்டதுபருவநிலை மாற்றம்: தாய்லாந்து 2050 க்குள் கார்பன் நடுநிலையையும், 2065 இல் நிகர பூஜ்ஜியத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்