அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசியால் மற்றொரு அரிதான ஆபத்து

இந்த சூழலில் ஒரு புதிய ஆராய்ச்சியில், ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி, மற்றொரு அரிதான அபாயகரமான இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட் தடுப்பூசியை தயாரித்தது. 2021-ம் ஆண்டு கோவிட் தொற்று நோய் உச்சத்தில் இருந்த போது, இந்த கோவிட் தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரிலும் (Covishield) ஐரோப்பாவில் Vaxzevria என்ற பெயரிலும் விற்கப்பட்டது.

இந்த தடுப்பூசியால் த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் த்ரோம்போசிஸ் (VITT) அபாயம் இருப்பதாக சமீபத்தில். இது ஒரு அரிதான ஆனால் ஆபத்தான இரத்த உறைதல் கோளாறு ஆகும். இந்த நிலையில் இந்த தடுப்பூசியில் “பிளேட்லெட் காரணி 4 (அல்லது PF4) என்று அழைக்கப்படும் ஒரு புரதம் இந்த ஆபத்தான ரத்த உறைவுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.

2023 ஆம் ஆண்டில், கனடா, வட அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த PF4 ஆன்டிபாடியுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கோளாறை விவரித்தனர், இது இயற்கையான அடினோவைரஸ் (பொது குளிர்) தொற்றுக்குப் பிறகு சில சந்தர்ப்பங்களில் ஆபத்தானது என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்த சூழலில் ஒரு புதிய ஆராய்ச்சியில், ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி, மற்றொரு அரிதான அபாயகரமான இரத்த உறைதல் கோளாறுடன் தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிற சர்வதேச வல்லுநர்கள் அடினோவைரஸ் தொற்றுடன் தொடர்புடைய ரத்த உறைதல் கோளாறு மற்றும் கிளாசிக் அடினோவைரல் இரத்தம் உறைதல் ஆகிய இரண்டிலும் உள்ள PF4 ஆன்டிபாடிகள் ஒரே மாதிரியான மூலக்கூறுகளை பகிர்ந்துகொள்வதைக் கண்டறிந்தனர்.

“உண்மையில், இந்த கோளாறுகளில் ஆபத்தான ஆன்டிபாடி உற்பத்தியின் பாதைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் மற்றும் ஒத்த மரபணு ஆபத்து காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும்” என்று ஃபிளிண்டர்ஸைச் சேர்ந்த பேராசிரியர் டாம் கார்டன் கூறினார். 

அதே குழு 2022 ஆம் ஆண்டு ஆய்வில் “PF4 ஆன்டிபாடியின் மூலக்கூறு குறியீட்டை சிதைத்து மரபணு ஆபத்து காரணியை அடையாளம் கண்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த புதிய கண்டுபிடிப்புகள், நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டது, தடுப்பூசி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கியமான தாக்கங்களையும் கொண்டுள்ளது.

முன்னதாக அஸ்ட்ராஜெனெகா கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணத்தில், தனது நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி ‘மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற நோய் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

TTS என்பது ஒரு அரிய பக்க விளைவு ஆகும், இது மக்களுக்கு இரத்த உறைவு மற்றும் குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை ஏற்படுத்தும். இதனால் இங்கிலாந்தில் குறைந்தது 81 பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது என்றும்,  நூற்றுக்கணக்கான மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கில் தான் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்ற தகவலை ஆஸ்ட்ராஜெனகா தெரிவித்தது. 

இதை தொடர்ந்து அந்நிறுவனம் ஐரோப்பா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளில் இருந்து தனது கோவிட் தடுப்பூசிக்கான “சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை” தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்