அதிக வெப்பம், நோன்பு எடுக்காததற்கு காரணம்

ஜொகூர் பாரு, மார்ச் 26.

ஜொகூர் பாரு சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொண்ட Op Kesan திடீர் சோதனையின் போது வெப்பமான வானிலையும் அதிகமான வேலை பழுவும்தான் நோன்பு எடுக்காததற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 12 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் நோன்பு காலத்தில் உணவு உட்கொள்வதை கண்டறியப்பட்டதை அடுத்து இரண்டு வணிகர்கள் உட்பட இரண்டு நபர்களுக்கு ஜொகூர் மாநில இஸ்லாமிய மதத்துறை நான்கு நோட்டீஸ்களை வெளியாக்கியதாக ஜொகூர் இஸ்லாமிய மத விவகாரக் குழுவின் தலைவர் மோஹட் பாரிட் மோஹட் காலிட் கூறினார்.

இதுக்குறித்து, ஷரியா சட்டவிரோத குற்றங்கள் சட்டம் 1997 பிரிவின் 15(a) மற்றும் பிரிவு 15(b) -யின் கீழ் 1,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே வழங்கப்படலாம் என்று மோஹட் பாரிட் குறிப்பிட்டார்.

நோன்பு பெருநாளை அவமதிக்கும் வகையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இது தொடர்பாக அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்