வெ.1.1 மில்லியன் கோரியிருக்கும் மூத்த அமலாக்க அதிகாரி உட்பட மூவர்

அலோர் செட்டார், மார்ச் 26.

1.1 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான ஒரு கப்பலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறி பொய்யான விவரங்களை சமர்பித்த நிறுவனத்தின் உரிமையாளர், சட்ட அமலாக்க ஏஜென்சி -யின் logistics துணை தலைவர் ஆகிய நான்கு பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இன்று அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி ரிமாண்டிற்கான விண்ணப்பத்தை சமர்பித்ததை தொடர்ந்து, 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்களை மார்ச் 31 ஆம் தேதி வரையில் 6 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி நூர்ஹிடாய மோஹட் நூர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதத்தில் சட்ட அமலாக்க கப்பலில் பராமரிப்பு பணிகள் தொடர்பான தவறான தகவல்களை சமர்பித்ததற்காகவும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 18 பிரிவின் கீழ் விசாரனை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் அஹ்மத் நிசாம் இஸ்மாயில் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்