அது புலியின் கால் தடமே !

கோத்தா திங்கி, ஃபெல்டா புக்கிட் அபிங்-இல் கண்டறியப்பட்ட கால் தடம் புலியின் கால் தடமே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பூங்கா துறையின் ஜோகூர் மாநில இயக்குநர் அமினுதீன் ஜாமின் தெரிவிக்கயில், இப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் வகையில் அந்தக் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளதாக்க் குறிப்பிட்டார்.

இருப்பினும், இது வரையில் புலி ஏதும் நேரில் காணப்பட வில்லை எனக் கூறிய அமினுதீன் ஜாமின், அந்தப் புலி தனது சொந்த வசிப்பிடப் பகுதிக்கே மீண்டும் திரும்பி இருக்கலாம் எனக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்