சொத்து முதலீட்டில் ஏமாற்றிய 3 ஆடவர்கள், ஒரு பெண் கைது

சொத்து முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 3 ஆடவர்களையும் ஒரு பெண்மணியையும் காவல்துறை கைது செய்துள்ளது சுப்ரிந்தென்டென் அமாட் மோசின் முகமட் ரோடி தெரிவித்தார்.

40 முதல் 50 வயதுக்குட்பட்ட நிறுவனத்தின் 3 முக்கிய இயக்குநர்களும் 30 வயது மிக்க ஒரு முதலீட்டு முகவரும் இந்த வழக்கு தொடர்பில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் கடந்த கடந்த 2019 வரை சொத்து முதலீட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக அமாட் மோசின் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஆடவர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து , இன்று சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் காவல் துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

அதில், 3 மடிக்கணினிகளும் , அந்த ஏமாற்று நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களின் 1,255 கோப்புகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் மதிப்பு 39 ஆயிரம் வெள்ளி எனவும் குறிப்பிட்டார்.

அந்த நிறுவனம் கெடா, ஜோகூர், பினாங்கு, மலாக்கா, பேரா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருவதாகவும் இதன் தொடர்பில் 3 விசாரணை அறிக்கைகளைக் காவல் துறை திறந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்