அந்தப் பெண்ணை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கோலத்திரெங்கானு, சூகாயில் உள்ள ஒரு கோழி விற்பனைக் கடையில் கோழி கூடைக்கு மத்தியில் ஒரு வார கைக்குழந்தையை கைவிட்டு சென்றதாக நம்பப்படும் 20 வயதுப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜாலான் அயேர் பூத்தே, ஜாலான் குபூரில் உள்ள அந்த கோழிக்கடையில் லோரி ஓட்டுநரால் மீட்கப்பட்ட அந்த ஆண் குழந்தை, மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தையை ஈன்றெடுத்தவரை போலீசார் கடந்த மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் இன்கு காலை 11 மணியளவில் அந்தப் பெண் ஜாலான் சுகாயில் பிடிபட்டதாக ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்