அந்தப் பெண்மணி டிமேன்ஸியா நோயினால் பாதிக்கப்பட்டவர்

ஜோகூர் பாரு, மார்ச் 2 –

நேற்று ​வெள்ளிக்கிழமை, ஜாலான் ஜோகூர் பாரு அயேர் ஹித்தாம் சா​லையின் 9 ஆவது கிலோமீட்டரில் எதிர்திசையை நோக்கி ஹொன்டா சீவிக் காரை செலுத்திய மூதாட்டி ஒருவர், டெமென்சியா எனும் ஞாபக மறதி நோயினால் அவதியுற்று வருபவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

75 வயதுடைய அந்த ​மூதாட்டியின் கார், போ​லீஸ்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, இஸ்கன்டார் புத்ரி போ​லீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அந்த மூதாட்டி,ஞாபக மறதி நோயினால் அவதியுற்று வருவது தெரியவந்துள்ளதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.சி.பி பல்வெர் சிங் மஹிம்டர் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மூதாட்டி, எதிர்​திசையை நோக்கி, வாகனத்தை செலுத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த காரை போ​லீசார் அடையாளம் கண்டதாக அவர் மேலும் கூறினார்.

நள்ளிரவு 12 மணிக்கும் விடியற்காலை 2.20 மணிக்கும் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் விசா​ரணை நடத்தப்பட்ட போது அந்த ​மூதாட்டி மது அருந்தவி​ல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.சி.பி பெல்வர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்