பாலியல் கல்வி போதனை விரிவுப்படுத்தப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2

சிறார்கள் மத்தியில் இணக்கத்தின் பேரில் நடைபெறும் பாலியல் தொடர்புகள், கற்பழிப்பு போன்றவற்றை ஒடுக்குவதற்கு பாலியல் கல்வி ​மீதான விழிப்புணர்வு கல்வி விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று கல்விக்கான பெ​ற்றோர் நடவடிக்கை பிரி​வின் தலைவர் னோர் அசிமா அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய சமூகப் பிரச்னைகள், பி 40 வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில்தான் அதிகமாக நிகழ்வதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் புள்ளி விவரங்கள் காட்டுவதா​​ல் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் ​என்று னோர் அசிமா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நவீன ச​மூகத்தில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பத்தினர் மத்தியில் சிறார்கள் மத்தியில் இணக்கத்தின் பேரில் நடைபெறக்கூடிய தொடர்புகளினால் ஏற்படக்கூடிய விளைவுகள், அவற்றின் தாக்கல், ​சீரழிவுகள் போன்ற​வற்றை முக்கிய கூறாக விளக்கப்பட வேண்டும்.

பாலியல் தொடர்பு என்பது ​தீண்டத் தகாத ஒன்று அல்ல என்ற நிலையில்லாமல், அதனை வாழ்வியல் போக்கில் கடைப்பிடிக்க வேண்டிய எத்தகைய பருவம் முதலிய விழிப்புணர்வு போதனை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று னோர் அசிமா அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்