அந்த ஆடவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது

ஜோகூர்பாரு, பிப்ரவரி 24 –

பதிமூன்று வயது சிறுவன் காரோட்டிச் செல்வது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த வாகனத்தையும், அதன் உரிமையாளரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் 25 வயது நபர், அடையாளம் காணப்பட்டு, சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரௌப் செலாமாட் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் டாயா வில் உள்ள ஒரு விளையாட்டுப் பூங்காவின் சாலையில் 13 வயது சிறுவனுக்கு காரோட்டும் பயிற்சியை அந்த நபர் அளித்துக்கொண்டு இருந்த போது அந்த காணொளி பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது என்று ரௌப் செலாமாட் குறிப்பிட்டார்.

எனினும் மற்றவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு பொது இடத்தில் வயது குறைந்த சிறுவனுக்கு காரோட்டும் பயிற்சியை கற்றுக் கொடுத்து குற்றத்திற்காக அந்த நபருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்