அந்த திட்டத்திற்கு நஜீப் தகுதி பெறவில்லை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –

நான்கு ஆண்டுகளுக்கும் குறைவாக சிறைவாசத் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளை வீட்டுத் தடுப்புக்காவலில் வைக்கும் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தகுதி பெறவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னாசுடியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கு குறைவான சிறைவாசத் தண்டனையை கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இந்த சிறப்புத் திட்டத்திற்கு தகுதி பெறுகின்றனர் என்று அமைச்சர் விளக்கினார்.

4 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனை காலத்தை கொண்டுள்ள சிறைக் கைதிகளை வீட்டுக்காவலில் வைப்பதற்கான திட்டத்திற்கு அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை புத்ராஜெயா அறிவித்து இருந்தது.

இந்த திட்டம், நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்காக உத்தேசிக்கப்படவில்லை. மாறாக, சிறைச்சாலைகளில் கைதிகள் இட நெரிசல் காரணமாக முன்மொழிப்பட்டுள்ளது என்று அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின்விளக்கம் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்