அந்த மூவர் தீவிரவாதிகள் அல்ல, அமைச்சர் விளக்கம்

அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையான FBI- யினால் பயங்கரவாத கண்காணிப்புக்கு உரியவர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ள மலேசியாவை சேர்ந்த மூன்று அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளின் தலைவர்கள் , உண்மையிலேலே தீவிரவாதிகள் அல்ல என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்காசிய நாடுகளுக்கு மலேசியாவின் உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் தன்னார்வ அடிப்படையில் உதவி வரும் அந்த மூன்று மலேசியர்களின் பின்னணியை மலேசிய போலீஸ் துறையில் ஆராய்ந்து பார்த்ததில் அந்த மூவரும் அத்தகைய பின்னணியை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது என்று சைபுடின் குறிப்பிட்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட மலேசியர்கள் யாரும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்பது போலீசான் ஆய்வில் தெரியவந்துள்ளது என்று சைபுடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்