அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்றால் நிறுவனத்தை தண்டிப்பதா ?

கோலாலம்பூர், ஜன – 5,

அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் டருவித்து அவர்களைப் பணியில் அமர்த்தத் தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என தோட்டத் தொழில், மூலப் பொருள் அமைச்சர் ஜோஹான் கனி பரிந்துரைத்திருந்தார், ஒரு அந்நியத் தொழிலாளர்ருக்கு வேலை இல்லை என்றால் 30 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், அந்த அந்நியத் தொழிலாளர்களாஇ சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் செலவையும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பரிந்துரை நியாயமற்றது எனக் கூறியுள்ளது FMM எனப்படும் மலேசிய தொழிற்சாலை சம்மேளனம்.

முதலாளிகளை அரசாங்கம் தண்டிக்கும் முன்னர் விரிவான விசாரணை முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என FMMஇன் தலைவர் சோ தியான் லாய் கேட்டுக் கொண்டார்.

சில பொறுப்பற்ற வெளிநாட்டுத் தொழிலாளர் முகவர்களின் வெற்று வாக்குறுதிகளால் தொழிலாளர்கள் மட்டும் இன்றி, முதலாளிகளும் பாதிக்கப்படுகிறார்கள். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டுற்குள் கொண்டு வருகிறார்கள். எனவே, இவ்விவகாரம் தொடர்பில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்களை முதலில் கலைய வேண்டும். பொறுப்பற்றத் தரப்பு மீது அரசாங்கத்தின் சட்டம் முதலில் பாய வேண்டும் என்றார் சோ.

இடைத் தரகர்களும் முகவர்களும் இல்லாத ஒரு நேரடி கட்டமைப்பை அரசாங்கம், குறிப்பாக மனிதவள அமைச்சு உருவாக்கித் தர வேண்டும் என FMM இதற்கு முன்னர் கோரி இருந்ததை சுட்டிக் காட்டினார் சோ.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்