சான்றிதழ் இல்லாமல் ஹலால் உணவுகள் விளம்பரம் செய்வது குற்றம்

கோலாலம்பூர், ஜன – 5,

Bufet, Iftar, Set Ramadan போன்ற இஸ்லாமியர்கள் உண்ணக் கூடிய ஹலால் உணவுகளை, ஹலால் அங்கீகாரச் சான்றிதழ் இல்லாமல் விளம்பரம் செய்வது பர்த்தகச் சட்டம் 2011இன் படி குற்றம் என மலேசிய இஸ்லாம் மேம்பாட்டுத் துறை ஜாக்கிம் தெரிவித்துள்ளது.

அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஹக்கிமா முகம்மட் யூசோஃப் தெரிவிக்கயில், இரமலான் மாதத்தின்போது நோன்பு துறப்பு, விருந்து ஆகிய சேவைகளை வழங்குகிறவர்கள் ஹலால் சான்றிதழ் இருப்பதௌ உறுதி செய்து கொள்வது அவசியம் என்றார்.

சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக அச்சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை செய்டு கொள்வதும் சாலச் சிறந்தது என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்