அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு இறுதி நாள் மே 31

புத்ராஜெயா, மார்ச் 8 –

அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு நிர்ணிக்கப்பட்டுள்ள இறுதி நாள், மே 31 ஆம் தேதியாகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேதி, ரத்து செய்யப்பட வேண்டும் என்று வெளிநபர்களிடமிருந்து நிறைய கோரிக்கைகள் வந்த போதிலும் இத்தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுடியன் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இதர வலுவான காரணங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்ட பின்னரே அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு மேற்கண்ட தேதியை கடைசி நாளாக அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

இது, உள்துறை அமைச்சின் மேற்பார்வையில் உள்ள அனைத்து ஏஜென்சிகள் மற்றும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற அமைச்சுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டாக எடுக்கபட்ட முடிவாகும். இந்த முடிவில் எந்த மாற்றம் இல்லை என்று சைபுடின் தெளிவுபடுத்தினார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்