அந்நிய நாட்டவர்களுக்கு தங்கும் விடுதியா?

பினாங்கு, Teluk Kumbar- ரில் அந்நிய நாட்டவர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி திட்டத்தை பினாங்கு அரசாங்கம் தொடருமானால் கோம்தார் கட்டடத்தில் தாங்கள் முகாமிடக்கூடும் என்று மலாய் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளன.

அந்நிய நாட்டவர்களுக்கு தங்கும் விடுதி கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow- வுடன் ஒரு சந்திப்பு நடத்தியப் பின்னரும் இத்திட்டம் தொடர்பாக தங்களுக்கு இதுவரையில் எந்த பதிலும் இல்லை என்று அந்த அமைப்புகளின் நடவடிக்கைக்குழுத் தலைவர் Ahmad Yakqub Nasri தெரிவித்துள்ளார்.

பினாங்கு அரசிடம் இன்று மீண்டும் ஒரு ஆட்சேப மனுவை தாங்கள் வழங்கியிருப்பதாகவும், தங்கள் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை என்றால் கோம்தாரில் முகாமிடுவது திண்ணம் என்று அவர் நினைவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்