மேலும் மூன்று வகையான மருத்துவ சோதனை

மலேசியாவில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களை மேலும் மூன்று வகையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எடுத்துள்ள முடிவை மலேசிய மருத்துவர் சங்கம் இன்று வரவேற்றுள்ளது. இந்த மூன்று வகையான சோதனைகள் அவசியமான ஒன்றாகும் என்று மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர் Dr Azizan Abdul Aziz தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே தொற்று நோய்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கு Hepatities C உட்பட இதர இரண்டு வகையான சோதனைகள் நடத்தப்படுவது மிக முக்கியம் என்று மலேசிய மருத்துவர் சங்கம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்