அந்நிய நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

சாலை போக்குவரத்து குற்றம் புரிந்ததற்காக தடுத்து நிறுத்திய அந்நிய நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாக்காரம் செய்தது, அவரின் ஆண் நண்பரை மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வக்கிரச் செயல்களை புரிந்ததாக கூறப்படும் இரு போலீஸ்காரர்களில் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இரு போலீஸ்காரர்களின் ஒருவரான 31 வயதுடைய லான்ஸ் கோபரல் முஹம்மது ஃபஸ்ருல் ரஸி யூனுஸ் என்பவர் 17 வயது கல்லூரி மாணவியை போலீசாரின் ரோந்து காரிலேயே பாலியல் பலாத்காரம் புரிந்து, பாலியல் சித்ரவதை செய்ததாக அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த போலீஸ்காரர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் அம்பாங், ஜாலான் பெர்சியாரான் சௌஜானா அருகில் போலீஸ் ரோந்து காருக்குள் இக்குற்றத்தை புரிந்ததாக அவருக்கு எதிராக நான்கு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஒரு பிள்ளைக்கு தந்தையான அந்த போலீஸ்காரர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டதின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை கோரியதால் அவரை 20 ஆயிரம் வெள்ளி ஜாமீனிவில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்