போலீஸ் துறையுடன் தேவஸ்தானம் சந்திப்பு

2024 ஆம் ஆண்டு பத்துமலை தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து குறிப்பாக வெள்ளி இரத ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் அதன் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜிட்டுடன் கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

இன்று காலையில் நடைபெற்றள இச்சந்திப்பின் போது தேவஸ்தானம் சார்பாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் கலந்து கொண்டனர்.

மாநகர் போலீஸ் தலைவருடன் துணை போலீஸ் தலைவர், மற்றும் டாங் வாங்கி, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர்களும் இச்சந்திப்பில் பங்கேற்று, வெள்ளி இரத ஊர்வலத்தின் போது பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள், மற்றும் சில தடைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இரத ஊர்வலத்தின் போது பட்டாசு, வாணவேடிக்கை, மோட்டார் சைக்கிள்களை முறுக்கிக்கொண்டு, பக்தர்களுக்கு இடையூறு விளைவிப்பது முதலிய செயல்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்படுகிறது. தவிர மது அருந்துவது, விற்பது போன்ற நடவடிக்கைகள் இருக்கக்கூடாது, இதனை பக்தர்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்