அனுமதிக்கப்பட்டதை விட அதிக அரிசி கையிருப்பு – செலாயாங்கில் 41 டன் பறிமுதல்

செலாயாங் வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை அரிசி வியாபார மையங்கள் மீது அரிசி மற்றும் நெல் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவினர் சோதனை மேற்கொண்டதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அச்சோதனையின் போது வர்த்தக உரிமத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளதை விட கூடுதலாக அரிசியை கடை நிர்வாகத்தினர் வைத்த்ருந்தனர்.

அந்த கடைக்கு எதிராக 1994ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 522) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அது தெரிவித்தது.

இந்த நிறுவனம் இரண்டாவது முறையாக இத்தகைய குற்றத்தைப் புரிந்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. இரண்டாவது முறையாகப் புரியப்படும் இத்தகைய குற்றங்களுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

சட்டம் 522 மற்றும் 1996ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும்படி அரிசி விற்பனை உரிமத்தை வைத்திருக்கும் அனைத்து தரப்பினரையும் அமைச்சு வலியுறுத்தியது. லைசென்ஸ் விதிகளை மீறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்