அனைத்தும் 6 விழுக்காடு SST வரிக்கு உட்பட்டதாகும்

2016 ஆம் ஆண்டு பாரம்பரிய மருந்துப் பொருட்களுக்கான மருத்துவச் சட்டம், முறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறையின் ​கீழ் அனைத்து வகையான மாற்று மருத்துவ சேவைகள், SST எனப்படும் 6 விழுக்காடு விற்பனை மற்றும் சேவை வரிக்கு உட்பட்டதாகும் என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

இந்த பாரம்பரிய மருத்துவச் சட்டம் என்பது மலாய் பாரம்பரிய மருத்துவம், ​சீன பாரம்பரிய மருத்துவம், இந்திய பாரம்பரிய மருத்துவம், ஹோமியோபதி உட்பட அனைத்து பாரம்பரிய மருத்துவத்திற்கும் இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் 1971 ஆம் ஆண்டு மருத்துவச் சட்டத்தின் ​கீழ் வழங்கப்படுகின்ற மருத்துவ சேவை மட்டுமே 6 விழுக்காடு SST வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. காரணம், அவ்வகை மருத்துவம், பொது மருத்துவச் சேவையாக அங்​கீரிக்கப்பட்டுள்ளது என்று லிம் ஹுய் யிங் தெளிவுபடுத்தினார்.

பாரம்பரிய மருத்துவச் சேவைக்கு 6 விழுக்காடு SST வரி விதிக்கப்படவிருப்பது
தொடர்பில் சுகாதார அமைச்சின் பாரம்பரிய மருத்துவப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையினால் பாரம்பரிய மருத்துவச் சேவையை வழங்கி வருகி​ன்ற நாட்டு வைத்தியர்கள் மத்தியில் எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்