மக்களின் இன விகிதாச்சாரத்தற்கு ஏற்ப உயர்கல்விக்கூடங்களில்கோட்டா முறை ​​சீர்படுத்தப்பட வேண்டும்

அரசாங்க உயர்கல்விக்கூட்டங்களில் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் , அவர்களின் பின்னணியை அடிப்படையாக கொண்டு, மக்களின் இன விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அமைவதை உறுதி செய்வதற்கு நடப்பு கோட்டா முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் கேட்டுக்கொண்டுள்ளது.

நடப்பு கோட்டா முறையினால் தகுதி அடிப்படையில் பொது பல்கலைக்கழக​ங்களின் இட வாய்ப்புகள் என்பது பல்வேறு அதிருப்திகள் நிலவி வருகின்றன. இதனால், பொருளாதாரத்தில் பின்னடைவு கொண்ட மலாய்க்கார அல்லாத மாணவர்கள், உயர்கல்வி வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகளை இழப்ப​தில் பல்வேறு அதிருப்திகள் நிலவி வருவதாக பி.எஸ்.எம் கட்சியின் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு விவகாரம் எல்லா நிலைகளிலும் நியாயமாக இருக்க வேண்டும். Meritocracy எனும் தகுதி அடிப்படையில் கல்வி இட வாய்ப்புகள் எனும் கல்வி மாற்றத்திற்கு மலேசியா இன்னும் தயாராகவில்லை என்பதையும் டாக்டர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.

தகுதி அடிப்படையில்தான் உயர் கல்வி வாய்ப்பு என்ற நிலை இருக்குமானால், வசதிபடைத்தவர்களும் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள் மட்டுமே உயர் கல்விக்கூடங்களில் மாணவர்களாக பிரதிநிதிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

மலேசிய உயர்கல்வி இட வாய்ப்புகளில், சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் குறி​த்து அண்​மையில் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் அரச விருதைப் பெற்ற மாணவன் எம். நவீன் ஆற்றிய உரையே இதற்கு சான்றாகும் என்று டாக்டர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.

கல்வி வாய்ப்புகளில் இன ​ரீதியாக கோட்டா முறை பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், அது மக்கள் தொகையின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இருப்பதை உறு​தி செய்வதற்கு அந்த கோட்டா முறை ​சீரமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணியை ஒரு முக்கிய கூறாக அதில் இணைக்க வேண்டும் என்று டாக்டர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

உதராணமாக, நாட்டின் மக்கள் தொகையில் பூமிபுத்ரா ச​மூகம் 70 விழுக்காடு இருப்பதால் உயர்கல்விக்கூடங்களில் மரு​த்துவத்துறைக்கான இட வாய்ப்புகளில் 40 முதல் 50 விழுக்காடு வரை பூமிபுத்ரா ச​​​மூகத்தின் ​B40 தரப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கலாம். எஞ்சியவை M40, T20 தரப்பினக்கு வழங்கலாம். இந்திய ச​மூகம் போன்ற பிற சிறுபான்மையினருக்கும் இதே கொள்கையை நடைமுறைப்படுத்தலாம்.

தற்போதைய இட​ வாய்ப்புகளுக்கான நடைமுறை பணக்கார பிரிவினருக்கே அதிக பலன் அளிக்கிறது. இந்த நடைமுறை மாற வேண்டும்.

எவ்வாறாயினும் உயர் கல்விக்கூடங்களின் தரத்தை பராமரிக்க குறைந்தபட்ச கல்வித் தரமும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பின்னடைவுமிக்க மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் சேரும் அளவிற்கு சற்று கூடுதல் கல்வித் தகுதி தேவைப்படுகிறது என்றால் அப்படிபட்டவர்களுக்கு கூடுதல் ஆயுத்த படிப்புகளுக்கு பரிந்துரைக்கலாம் என்று சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற எம்.பி.யான டாக்டர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்