அன்வாரை ஆதரிப்பதற்கு தனிநபர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்தார்களா? ஒரு வாரத்திற்குள் புகார் அளிப்பீர்

தாசெக் கெலுகோர் Tஎம்.பி.க்கு ஸ்.பி.ர்.ம் காலக்கெடு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதற்கு சில தனிநபர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பெர்சத்து கட்சியின் தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான், இன்னும் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை தந்தாக வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் காலக்கெடு வழங்கியுள்ளது.

பிரதமர் அன்வாரை ஆதரிப்பதற்கு யார் யார் லஞ்சம் கொடுக்க வந்தார்கள் என்பதை அந்த பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. அம்பலப்படுத்த வேண்டும். அவ்வாறு அம்பலப்படுத்துவது மூலமே சம்பந்தப்பட்ட நபர்களை தாங்கள் விசாரிக்க முடியும் என்று SPRM தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாகி தெரிவித்துள்ளார்.

பணத்தை அல்லது வேறு அனுகூலத்தை லஞ்சமாக கொடுக்க வந்தவர்களை விசாரணை செய்வதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் ஸ்.பி.ர்.ம் மின் தலையாயப் பணியாகும்.

எனவே அந்த பெர்சத்து கட்சி உறுப்பினருக்கு இன்று முதல் ஒரு வார கால அவகாசத்தை ஸ்.பி.ர்.ம் வழங்குவதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

கையூட்டு கொடுக்க வந்ததாக கூறப்படும் நபர்களின் பெயரை ஸ்.பி.ர்.ம் . மிடம் தெரிவிக்க வான் சைபுல் வான் ஜான் தவறுவாரேயானால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து இப்போதைக்கு தாம் தெரிவிக்க இயலாது என்பதையும் அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்