அமலாக்கத் தரப்பின் கைதுக்கு பயந்து SILING கூரையில் மறைந்துக்கொண்ட கள்ளக்குடியேறிகள்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 22-

ஜொகூர் பாரு-வில் அம்மாநில குடிநுழைவுத் துறையின் கைதுக்கு பயந்து, தங்கியிருந்த தளங்களின் SILING கூரைகளில் பதுங்கிக்கொண்ட கள்ளக்குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை தாமான் டாயா-வில் உள்ள 13 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாதது உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில், 44 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 11 மாத பெண் குழந்தையும் அடங்கும் என ஜொகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மேற்கட்ட நடவடிக்கைக்காக, குடிநுழைவுத் துறையின் செட்டியா டிராபிகா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட வேளை, விசாரணைக்கு உதவும் பொருட்டு நபர் ஒருவருக்கு இரு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்