நஜீப்பின் வீட்டுக்காவல் உத்தரவு மீதான Afidavit மனுவிற்கு அம்னோ டிவிஷன்கள் ஆதரவு

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

தனக்கு எதிரான சிறைத் தண்டனைக் காலம் 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட நிலையில், அந்த 6 ஆண்டு கால சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு கூடுதல் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அதனை ஆதரித்து அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சமர்ப்பித்துள்ள Afidavit மனுவிற்கு பெரும்பாலான அம்னோ டிவிஷன்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கூடுதல் உத்தரவு தொடர்பில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட்டின் Afidavit மனுவை 191 அம்னோ டிவிஷன்களில் பெரும்பாலான டிவிஷன்கள் ஆதரிப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் இன்று அறிவித்துள்ளார்.

நஜீப் வெறும் ஒன்பது ஆண்டுகள் மட்டுமே நாட்டின் பிரதமராக இருந்தார் என்ற கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. .

மாறாக, இதற்கு முன்பு நாட்டின் துணைப்பிரதமராகவும் அமைச்சராகவும், துணை அமைச்சராகவும், மந்திரி பெசராகவும் பல ஆண்டு காலம் இருந்துள்ளார் என்பதற்கான அவரின் சேவையை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

அதன் அடிப்படையிலேயே நஜீப்பின் வீட்டுக்காவல் தொடர்பான கூடுதல் உத்தரவை அம்னோ ஆதரிப்பதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான அகமது மஸ்லான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்