அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தை

கோலாலம்பூர், மே 17-

கோலாலம்பூரையும், சிங்கப்பூரையும் இணைக்கும் அதிகவேக ரயில் திட்டமான HSR குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு பின்னரே சிங்கப்பூருடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் மேற்கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இந்த அதிவேக ரயில் திட்டம் மீதான உத்தேச அறிக்கை, இன்னமும் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ளது. பொருத்தமான நேரத்தில் அந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

HSR திட்டம் குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட்- துடன் பேசப்பட்டுள்ளது. ஆனால், அது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை அல்ல என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்