பிரதிநிதித்துவ மனுவை ஏ.ஜி. அலுவலகம் நிராகரித்தது

ஷாஹ் அலாம், மே 17-

தனக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, கெடா மந்திரி பெசார் சனுசி முஹமட் நோர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி, பிரதிநிதித்துவ மனுவை சனூசி கடந்த மே 3 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தில் சமப்பித்ததாக தெரியவந்துள்ளது.

எனினும் சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய இயலாது என்று கூறி, அவரின் விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஸ்ரி முகமது தாவூத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்