அரசாங்கப் பதவி கோரி, அன்வாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேனா? மறுக்கிறார் ஹம்சா சைனுடின்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்து, அரசாங்கப் பதவிக் கோரி தாம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுவதை எதிர்க்கட்சித் தலைவரும், பெரிக்காத்தான் நேஷ்னல் பொதுச் செயலாளருமான டத்தோ ஶ்ரீ வன்மையாக மறுத்துள்ளார்.

பிரதமர் அன்வாரை தாம் சந்திக்கவும் இல்லை, பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை, அரசாங்கப் பதவியை கோரவும் இல்லை என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான ஹம்சா சைனுடின் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அன்வார், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்றது முதல் இதுவரையில் அவரை தாம் நேரடியாக சந்தித்தது கிடையாது என்று ஹம்சா சைனுடின் விளக்கினார். .

அன்வாரை தாம் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுவது கட்டவிழ்க்கப்பட்டுள்ள பொய்யாகும். உண்மையல்ல, அது ஓர் அவதூறாகும் என்று இன்று பெரிக்காத்தான் நேஷனல் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹம்சா சைனுடின் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்