சொத்து விவரங்களை அறிவிக்க 30 நாள் கால அவகாசம் உள்ளது

தங்களின் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கு தங்களுக்கு 30 நாள் கால அவகாசம் உள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரு மகன்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எமிற்கு நினைவுறுத்தியுள்ளனர்.

எஸ்பிஆர்எம் கேட்டுக்கொண்டதற்கு இணைங்க அந்த ஆணையத்திடம் தங்கள் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கு தாங்கள் உறுதி பூண்டு இருப்பதாக துன் மகாதீரின் புதல்வர்களான மிர்சான் மகாதீர் மற்றும் மொக்சானி மகாதீர் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

எஸ்பிஆர்எம் கோரியிருப்பதைப் போன்று தங்கள் தந்தையார் துன் மகாதீர், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்த கடந்த 1981 ஆம் ஆண்டிலிருந்து தங்களின் சொத்து விபரங்கள் தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட இலாகாக்களிடமிருந்து தாங்கள் பெற்று வருவதாக மிர்சான் மகாதீர் ரும், மொக்சானி மகாதீர் ரும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்