அரசாங்கம் அந்நிய தொழிலாளிகளை வரவழிக்கும் முறைகளை சீர்ப்படுத்த வேண்டும்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 3 –

முறையான ஆவணங்கள் இன்றி, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 1000 வங்காளதேசிகளின், நிலையை கருத்தில் கொண்டு, இனி அரசாங்கம் அந்நிய தொழிலாளிகளை வரவழிக்கும் முறைகளை சீர்ப்படுத்த வேண்டும் என கெப்போங் நாடளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்நிய தொழிலாளிகள் நடைமுறையை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும், அது பல்வேறு அமைச்சுகளின் கீழ் நடைபெற்று வருவதால், லஞ்ச ஊழல்கள் ஏற்பட வழிவகுக்கும் என அவர் கூறினார். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் வாங்கி தருவதாக கூறி பொய்யான ஆவணாங்களைத் தயார் செய்து மலேசியாவிற்குள் நுழைந்துவிடும் அந்நிய தொழிலாளிகள், ஏமாற்றப்பட்டு இன்று சிறைச்சாலையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர் என லிம் கூறினார்.

அந்நிய தொழிலாளர்களை மலேசியாவிற்குள் வரவழைக்க பலதரப்பட்ட அமைச்சுகளை அவர்கள் தாண்டி வருவதால், லஞ்ச செயல்பாடுகள் ஏற்பட சாத்தியங்கள் அதிகம் என அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்