நாடளுமன்ற உறுப்பினர்களின் நாற்காலிகள் காலியாக்கப்பட்டால், பாரிசான் நெசனல் தங்களின் வேட்பாளர்களை முன் நிறுத்தும்

கோலாலம்பூர், மார்ச் 3 –

நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்த 6 பெர்சத்து கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் நாற்காலிகள் காலியாக்கப்பட்டால், பாரிசான் நெசனல் தங்களின் வேட்பாளர்களை முன் நிறுத்தும் என பாரிசான் கூட்டணியின் தலைவரும் நாட்டின் துணை பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் சாயிட் இன்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைப்பற்றிய நாடாளுமன்ற தொகுதிகளின் நாற்காலிகள் பாரிசானுக்கு சொந்தமானதாக இருந்ததால், அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல வருமாயின், பாரிசான் தன்னுடைய வேட்பாளர்களை அங்கு நிறுத்தும் எனவும் இதற்கு ஒற்றுமை அரசாங்கம் ஒப்புதல் சவழங்கும் என தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று நடந்த பெர்சத்து கட்சியின் கூட்டத்தில், அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் 6 உறுப்பினர்களின் நாடாளுமன்ற தகுதியை நீக்க சாத்தியங்கள் உள்ளதால் அவர் இவ்வாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்