அரசாங்கம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், மே 17-

அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பற்றாக்குறை நிலவிவருவதாக கூறப்படுவது குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பொதுச்சேவை ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக் அரசாங்கத்தை இன்று கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவமனை ஒன்றில் நிலவி வரும் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து, வருத்தம் தெரிவித்து அதன் நிர்வாகம் வெண்பலகையில் மன்னிப்பு கேட்டு இருக்கும் செயல் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் கியூபெக்ஸின் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்னையை மிக சாதாரணமாக கருதக்கூடாது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்