போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மே 17-

உயிரை பறிக்கும் அளவிற்கு மலேசியாவில் குழப்பதை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டர்.

ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளையும் தாம் ஆதரிப்பதாக குறிப்பிட்ட பிரதமர், போலீசாரின் நடவடிக்கைக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தமது அரசாங்கம், நாட்டின் அமைதியை உறுதி செய்வதில் எந்தவொரு தரப்பினருடனும் சமரசம் செய்து கொள்ளாது என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர், மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நாட்டில் அமைதி கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எந்தவொரு முன்னேற்றமும் அர்த்தமற்றதாகி விடும் என்று விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்