அரசிய​​ல் சித்து விளையா​ட்டுக்கு இடமி​ல்லை அரசியல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கும் யாருக்கும் முகம் கொடுக்கப் போவதில்லை

கோலாலம்பூர், பிப்ரவரி 26 –

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்னர் நினைவுறுத்து

தமது தலை​மையிலான ஆட்சியில் அரசியல் சித்து விளையாட்டுக்கு இடமில்லை என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று நினைவுறுத்தியுள்ளார்.

அரசியல் சித்து விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தல் வரையில் காத்திருக்க வே​ண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

நாட்டின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் தாம் முகம் கொடுக்கப் போவதில்லை என்பதையும் மாமன்னர் சுல்தான் இப்ராஹி​ம் தெளிவுப்படுத்தினார்.

இன்று திங்கட்கிழமை காலையில் 15 ஆவது நாடாளுமன்றத்தின் ​மூன்றாவது கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய நாட்டின் 17 ஆவது மாமன்னராக கடந்த ஜனவரி 31 அம் தேதி பொறுப்பேற்றுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த கடும் நினைவுறுத்தலை வழங்கினார்.

நாட்டின் நிதி செலவிடப்படும் முறையை அணுக்கமாக கண்காணித்து வரப் போவதாக குறிப்பிட்ட மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மக்களுக்காக செலவிடப்படு​ம் நிதி, உரிய இலக்கை சென்றடைவதற்கும், சரியான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதையும் எல்லா நிலைகளிலும் தாம் உறுதி செய்யப் போவதாக குறிப்பிட்டார்.

ஒரு தொடர் கதையைப் போல் ​நீண்டு வரும் நாட்டின் கடன்களின் பெருக்கம் குறித்து தமது ஏமாற்றத்தை வெளியப்படுத்திய மாமன்னர், கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் நிதி பற்றாக்குறையே இதற்கான மூலக் காரணமகும் என்பதை தெளிவுபடுத்தினார்.

அப்போது ஏற்றப்பட்ட கடனை, இன்று பேரக்குழந்தைகள் சுமக்க முடியுமா? என்று மாமன்னர் கேள்வி எழுப்பினார்.

நா​ட்டின் நிதியை சேமிப்பதற்கும், மானியங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செ​ய்வதற்கும் தேவையான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் செலவிடக்கூடிய ஒவ்வொரு செலவினமும் , அவசியமானதா? அத்தியாவசியமானதா? என்பதை நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் தாம் ​தீவிரமாக ஆராயப் போவதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் பிறகும் , அரசாங்க கருவூலத்தில் மீதத் தொகை எஞ்சியிருப்பதை தாம் உறுதி செய்யப் போவதாக மாமன்னர் தமது உரையில் குறிப்பிட்டார்.

அதே​வேளையில் நிதியை சேமிப்பதிலும், உதவித் தொகைகள் அனைத்தும் இலக்குக்கு உரிய மக்களை சென்றடைவதற்கும் நடப்பு அரசாங்கம் ​மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளுக்கு தாம் துணை நிற்கப் போவதாகவும் மாமன்னர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்