அரபு மொழியில் அச்சிடப்பட்ட “அல்லா” சொல் கொண்ட காலணிகளை விற்பனை செய்ததற்காக வேர்ன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியது

அரபு மொழியில் அச்சிடப்பட்ட ” அல்லா” என்ற சொல்லை குறிக்கும் சின்னத்துடன் காலணிகளை விற்பனை செய்ததற்காக வெர்ன்ஸ் ஹோல்டிங் Sdn Bhd நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

சம்பந்தப்பட்ட சின்னம் high heeled காலணிகளை போன்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கோடுகளின் வடிவத்தை கொண்டிருப்பதாகும் என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய சர்சைக்குரிய காலணிகளை வெளியீடு செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் இதுபோன்ற தவறு மேலும் நடக்காமல் இருக்க கவனமாக இருப்பதாகவும் தவறை திருத்திக் கொள்வதற்கு தமக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கும்படி அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அந்த வடிவமைக்கப்பட்ட காலணியில் தவறான விளக்கத்தை வழிவகுக்கும் குறைபாடுகள் இருப்பதாகவும் பல தரப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இச்செயல் இருப்பதை தாம் ஒப்புக் கொள்வதாகவும் வேர்ன்ஸ் நிறுவனம் கூறியிருந்தது.

எந்தவொரு மதத்தையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்தும் அல்லது அவமதிக்கும் நோக்கில் இத்தகைய சின்னத்தை காலணியில் வடிவமைக்கவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இனிமேல் ஒவ்வொரு சின்னத்தை வடிவமைப்பதில் அதீத கவனம் செலுத்துவத்துடன் இதனை ஒரு படிப்பினையாக எடுத்து கொள்வதாக வேர்ன்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்