ஆக்கப்பூர்வமான விளைவுகளை தந்தது மித்ரா பட்டறை

புத்ரஜெயா, மார்ச் 22.

மலேசிய இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு புதிய சவால்களையும், வாய்ப்புகளையும் அடையாளம் கண்டு, புதுமையான தீர்வுகளைப் பற்றி விவாதிப்பதற்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டு நாள் மித்ரா பட்டறை ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங்- கினால் கடந்த புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டு, தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியின் மேற்பார்வையில் புத்ரஜெயாவில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் பட்டறைக்கு மகத்தான் வரவேற்பு கிடைத்துள்ளது.

பெமாண்டு எனப்படும் செயல்திறன் நிர்வாகம், செயலாக்கப்பிரிவின் வழிகாட்டலுடன் மலேசிய இந்திய சமூகத்தின் வியூக பட்டறையான இது B40 இந்தியர்களின் சமூக பொருளாதார செழுமைக்கு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டதாகும் என்று மித்ராவின் இரண்டு நாள் பட்டறையை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்த துணை அமைச்சர் கந்தசாமி தமது உரையில் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தில் பல்வேறு நிலைகளை சேர்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பட்டறை, இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு தளம் அமைக்கும் வியூகம் நிறைந்தது என்ற பட்டறையில் கலந்து கொண்ட அரசாங்க சார்பற்ற பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்த B40, M40, T20 ஆகியோருக்கு எவ்வாறு உதவி செய்யலாம், சமுதாய மேம்பாட்டிற்கு எப்படி பங்களிக்கலாம் போன்ற கருத்துகளை வெளிப்படுத்துகின்ற பயிலரங்கமாக இது இருந்தது. எனினும் சமுதாயம் முன்னேற்றம் என்பது ஒரு நாள் பேசி முடிப்பது அல்ல. தொடர்ந்து பேச வேண்டும், முறையான மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிறார் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழரசு சுப்பிரமணியம்.

நமது சமுதாயத்தினர் என்னென்ன வாய்ப்புகளை பெற முடியும், அதற்கான வாய்ப்புகளை யாவை என்பதை கண்டறிவதற்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தைப் போல் மித்ராவின் இந்த பட்டறை அமைந்தது என்கிறார் ஜூலியானா ஜெசிந்தாமலர்.

இந்திய சமுதாயத்தில் B40 தரப்பினரை உருமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிகோளை முன்வைக்கப்பட்டதுடன் , அவர்களை அடுத்த கட்ட நகர்வை நோக்கி கொண்டு செல்வதில் நிறைய யோசனைகள் பகிரப்பட்டதாக பங்கேற்பாளர் ஆண்டாள் கிருஷ்ணன் தெரிவித்தார்.

மித்ராவின் இந்த இரண்டு நாள் பட்டறையானது, மித்ராவினால் கொடுக்கப்படுகின்ற மானியங்கள் எந்தெந்த வகையில் சமுதாயத்திற்கு முறையாக சேர்க்கலாம் என்று மிக ஆழமாக விவாதிக்கப்பட்டது பாராட்டக்கூடியதாகும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தை சேர்ந்த ஏ.கே ரமேஷ் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தை உருமாற்றம் செய்வதற்கு என்னென்ன தேவை, அவற்றை எவ்வாறு கட்டமைப்பது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு களமாக இந்த இரண்டு நாள் பட்டறை அமைந்தது. இது ஒற்றுமைத்துறை அமைச்சு எடுத்தக்கொண்டுள்ள பெரும் முயற்சியாகும் என்று சிலாங்கூர் ஆத்மா நல்வாழ்வு அமைப்பை சேர்ந்த டாக்டர் நாகேஷ் குறிப்பிட்டார்.

பல காலமாக பல குறைகள் இருந்தாலும் இந்திய சமுதாயத்திற்கு தேவையானவற்றை செய்வதற்கு பல சமூகம் சார்ந்த அமைப்புகள், முக்கிய நபர்களை அழைத்து திட்ட வகுக்கும் பணி தொடர்பான விவரங்கள் பேசப்பட்டது. அந்த வகையில் தமிழ்ப்பள்ளிகளில் உள்ள சிக்கல்களையும், தமிழ்ப்பள்ளிகளை உருமாற்றத்திற்கு கொண்டு செல்வதற்கான அடுத்த கட்ட நகர்வுகளை திட்டமிட்டுள்ளதாக விரிவுரையாளர் பழனி கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பட்டறையில் பங்கேற்றவர்களின் கருத்துகளும் சேகரிக்கப்பட்டு, ஆக்கப்பூர்வமானவற்றை திட்ட வரைவுக்கு கொண்டு வந்தால் மித்ரா தனது செயல்திட்டங்களை வடிவமைப்பதிலும், அமல்படுத்துவதிலும் பேருதவியாக இருக்கும் என்று கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் முன்னாள் தலைவர் டத்தோ’ R. ராமநாதன் தெரிவித்தார்.

மித்ராவின் மானியம், அதன் செயல் திட்டங்கள் இலக்குக்கு உரிய மக்களை சென்றடையவதை உறுதி செய்தற்கு இயக்கப் பொறுப்பாளர்களுக்கு தெளிவான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த இரண்டு நாள் பட்டறை, எதிர்கால வழிகாட்டலுக்கு ஓர் அடித்தளமாக அமையும் என்று துணை சரஸ்வதி கந்தசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்