விலங்கிடப்படாது குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்

கோலாலம்பூர், மார்ச் 22.

லஞ்ச ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுபட்டுள்ள முன்னள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தாம் எதிர்நோக்கியுள்ள இதர வழக்கு விசாரணைக்களுக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது அவர் ஏன் கைவிலங்கிடப்படவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் பத்லி சாரி கேட்டுக்கொண்டார்.

நஜீப் ஏன் கைவிலங்கிடப்படவில்லை என்று ஜெலுத்தோங் டிஏபி எம்.பி. ஆர்எஸ்என் ராயர் சர்ச்சை செய்ய வேண்டியதில்லை என்று அஹ்மத் பத்லி நினைவுறுத்தினார். நீதிமன்றத்திற்கு நஜீப் கொண்டு வரப்படும் போது கைவிலங்கிடப்படாதது, அந்த முன்னாள் பிரதமருக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகையா? என்று மக்களவைக்கூட்டத்தில் ஆர்எஸ்என் ராயர் கேள்வி எழுப்பிய போது குறுக்கிட்ட அந்த பாஸ் கட்சி தலைவர் , இந்த வேண்டுகோளை விடுத்தார்.

நஜீப் முன்னாள் பிரதமர் ஆவார். அவர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் பிரத்தியேக சலுகைகளை பெறுவதற்கு உரிமைப்பெற்றுள்ளார். முன்பு, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறைத் தண்டனை அனுபவித்த காலத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது அவர் கைவிலங்கிடப்படாததை அஹ்மத் பத்லி சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்