ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா வெற்றி

Setia City Convention Center – ரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாட்மின்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டி B குழுவின் இறுதி ஆட்டத்தில் மலேசியா 3-2 என்கிற கோல் கணக்கில் தைவானை வென்றது.

ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் Lee Zii Jia 21-16, 21-13 என்கிற கோல் கணக்கில் Lin Chun-yi -வை வீழ்த்தி தமது அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.

கடந்த ஆண்டு மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் Chun-yi -யிடம் தோல்வியடைந்த Zii Jia -விற்கு இது ஒரு மிக பெரிய வெற்றியாக அமைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் Goh Sze Fei-Nur Izzuddin Rumsani ஆகியோர் 21-19, 21-14 என்ற கணக்கில் Wang Chi-lin – Yang Po-han ஆகியோரை தோற்கடித்து மாபெரும் வெற்றியை தேடி தந்தனர்.

போட்டியின் வெற்றியாளராக மலேசியா இன்று வெள்ளிகிழமை காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்