3 மாநிலங்களில் வறிய நிலையை துடைத்தொழிப்பதில் 100 விழுக்காடு வெற்றி – பிரதமர் அன்வார் பெருமிதம்

கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மக்களின் வறிய நிலையை துடைத்தொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சி 100 விழுக்காடு வெற்றியை தந்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று மாநிலங்களிலும் வறிய நிலையில் உள்ள மக்களை ஏழ்மைக் கோட்டிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையினர் மலாய்க்காரர்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. மாறாக, சீனர்கள் மற்றும் இந்தியர்களையும் இது உள்ளடக்கியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வறிய நிலை துடைத்தொழிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பெரும்பான்மையினர் மலாய்க்காரக்ளாக இருந்தாலும் விகிதாசார ரீதியாக இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

குறிப்பாக, கோலாலம்பூரில் ஒவ்வொரு இந்திய குடும்பத்தினருக்கும் அரசாங்கம் வழங்கியிருக்கும் உதவிகள் மூலம் அவர்கள் வறுமை கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதுவே அரசாங்கத்தின் அணுகுமுறையாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தம்மைப் பொறுத்தவரையில் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் என பாராமல் இந்த மூன்று மாநிலங்களிலும் வறுமை கோட்டில் உழன்றிருந்த ஒவ்வொருவரும் 100 விழுக்காடு மீட்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் விளக்கினார்.
இன்று கோலாலம்பூரில் மலேசிய சீன வர்த்தகர்கள், தொழில்துறையினர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சீனப்புத்தாண்டையொட்டிய நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்துகையில் பிரதமர் இவ்விவரத்தை வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்