ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்

துபாய், ஏப்ரல் 25-

துபாயில் இன்று தொடங்கிய 21ஆவது ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் தீபான்ஷூ சர்மா 70.29 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

உலக U-20 தடகள சாம்பியன்ஷிப்பிற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக செயல்படும் ஆசிய U-20 போட்டியில் பங்கேற்க 60 பேர் கொண்ட குழுவை இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் தென் அமெரிக்காவில் உள்ள பெருவின் லிமா பகுதியில் நடைபெறுகிறது. உலக சாம்பியன்ஷிப்பிற்கான ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று துபாயில் தொடங்கியது.

இதில் இன்று நடந்த ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் திபான்ஷூ சர்மா 70.29 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார். மேலும், ரோஹன் யாதவ் ஈட்டி எறிதலில் 70.03 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதே போன்று மற்றொரு போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ரித்திக் ரதீ 53.01 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்க பதக்கம் உள்பட 19 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்