ருதுராஜ் கெய்க்வாட் அதிர்ஷ்டம் இல்லாத கேப்டன்

இந்தியா, ஏப்ரல் 24-

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 39ஆவது லீக் போட்டி உள்பட சிஎஸ்கே விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் டாஸில் தோல்வி அடைந்துள்ளது.

கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது டாஸில் தொடங்கி பேட்டிங், பவுலிங், வெற்றி, தோல்வி வரை பயணிக்கிறது. மேலும், முக்கியமான போட்டிகளில் சில வெற்றிகள் அதிர்ஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றிருந்தால் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியிருக்கும். ஆனால், ஆஸி, டாஸ் வென்று போட்டியில் வெற்றி பெற்று டிராபியையும் கைப்பற்றியது.

அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது சிஎஸ்கேயின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஷியில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடருக்கு ஒரு நாள் முன்னதாக எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றார்.

இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் சென்னையில் நடந்த 22ஆவது லீக் போட்டிய்ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் டாஸ் வென்றார். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றார். அதன் பிறகு எந்தப் போட்டியிலும் டாஸ் ஜெயிக்கவில்லை. எனினும், அதன் பிறகு நடந்த 3 போட்டிகளில் சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் தோல்வி அடைந்துள்ளார். இதில், சிஎஸ்கே 4 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. நேற்று சென்னையில் நடந்த 39ஆவது லீக் போட்டியில் டாஸ் ஜெயித்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது.

இதில், ருத்ராஜ் கெய்வாட் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஷிவம் துபே 66 ரன்கள் எடுத்தார். பின்னர் 211 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் பேட்டிங் செய்தது. இதில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி சதம் விளாசி இந்த சீசனில் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்