ஆன்லைன் பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி

மலேசிய சுங்கத்துறை அண்மையில் வெளியிட்டுள்ள வழிகாட்டல்படி, ஆன்லைன் மூலம் வாங்கப்படும் 500 வெள்ளிக்கும் குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி விதிக்கப்படவிருக்கிறது.. இந்த வரி விதிப்பு வரும் ஜனவரி முதல் தேதிலிருந்து அமலுக்கு வருகிறது.

நிதி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் ஆன்லைன் மூலம் வாங்கப்படும் பொருட்கள், மலேசிய வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். இது குறைந்த விலையில் வாங்கப்படும் பொருட்களுக்கு பொருந்தும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விற்பனை வரிச் சட்டம் மீதான திருத்தத்திற்கு ஏற்ப இந்த பத்து விழுக்காடு விற்பனை வரி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்