ஆபத்துகளைச் சந்திக்க மலேசியா தயாராக இருக்க வேண்டும்

 

கோலாலம்பூர், ஜன – 7,

 

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதார வளர்ச்சி குறித்த விவகாரங்களில் மலேசியா முதலீடு செய்வதையும் சந்தைப்படுத்துதலையும் இலக்காகக் கொண்டு செயல்படவும், அத்ல் ஏற்படும் ஆபத்துகளைச் சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும் என முதலீடு, வணிகம், தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz தெரிவித்தார்.

 

கடந்த 2023இல் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை மிகவும் வலுவான, மற்றும் நிலையானதாக வடிவமைக்க தமது அமைச்சு செயல்பட்டதாகவும் இந்த ஆண்டு ஒவ்வொரு திட்டமும் துல்லியமாக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 

இந்தத் திட்டங்களால் மக்களுக்கு எவ்வாற நன்மை பயக்கும் என்பது குறீத்து தொடர்ந்து விளக்கம் கொடுக்கப்படும் எனவும் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அஸிஸ் கூறினார்.

மிகவும் சிக்கலான விவகாரங்களை புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு தீர்க்க முடியும் என மக்கள் முழுதாய் நம்பிக்கை வைக்க வேண்டும். முற்போக்கான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்