ஆப்கானிஸ்தானுடன் ஒத்துழைக்க மலேசியா தயார்

ஆப்கானிஸ்தானுடன் தனது ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு நாடாக ஜ.நா.வினால்​ ஆப்பானி​ஸ்தான் வகைப்படுத்தப்பட்ட போதிலும் அந்நாட்டுடன் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கான மலேசியாவின் நிலைப்பாடு , OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு அமைப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

காபுலுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதில் மலேசியாவிற்கு பிரச்னை இருக்காது. அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறு​மிகளின் உரிமைக​ள் பறிக்கப்பட்ட விவகாரத்தில் மலேசியாவிற்கு உடன்பாடுயில்லை என்பதையும் பிரதமர் தெ​ளிவுபடுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்