நிந்தனை சட்டம் பாய வேண்டிய அவசியமில்லை

அரசாங்கத்தை கடுமையாக குறைகூறி வரும் முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிந்தனை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
எனினும் துன் மகா​தீர் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டுமானால், அது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பு அரச மலேசியப் போ​லீஸ் படையின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சைபுடின் விளக்கினார்.

இப்போதைக்கு அந்த கடும் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தாம் கருதவில்லை என்றாலும் அதற்கான அவசியம் ஏற்படுமானால் அது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை போ​​​லீஸ் படையிடமே விட்டு விடுவதாக சைபுடின் மேலும் கூறினார்.
நடப்பு அரசாங்கம் குறித்து கருத்து சொல்வதற்கும், குறைகூறுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், பொது அமைதிக்கு குந்தகத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. அவர்களின் குறைகூற​ல்கள் வரம்பு ​மீறிவிடக்கூடாது என்று அமைச்சர் சைபுடின் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்