இடைநிலை பள்ளிக்கு மாற்றாக நற்சான்றிதழ் கல்வி மார்ச் 11 முதல் தொடக்கம்

கோலாலம்பூர், மார்ச் 4 –

2023 ஆம் ஆண்டு இடைநிலை பள்ளிக்கு மாற்றாக நற்சான்றிதழ் கல்வி வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி முதல் சிறப்பு கல்வித் தேவைகள் ம்.பி.பி.கெ உள்ள மாணவர்களுக்கு வெளியிடப்படவுள்ளது.

காலை 10 மணி தொடங்கி மாணவர்கள் தங்களின் பள்ளியிலிருந்து அதனை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு ம்.பி.பி.கெ வின் இடைநிலை பள்ளிக்கான மாற்றாக கல்வி மதீப்பீடு ஜனவரி 19 ஆம் தேதி நிறைவடைந்ததாக கல்வி அமைச்சகம் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்திருந்தது.

2023/2024 ஆம் ஆண்டிற்கான கல்வி நுழைவிற்கு நாடு முழுவதும் இருக்கின்ற 725 பள்ளிகளிலிருந்து மொத்தம் 3,210 ம்.பி.பி.கெ மாணவர்கள் பள்ளிப் படிப்பினை முடித்து குறிப்பிடப்பட்ட சான்றிதழ் பெற தகுதியடைந்திருப்பதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

2013 யிலிருந்து 2025 வரையிலான மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பதைப் போல மாணவர்களுக்கு சமநிலையில் கல்வி கிடைக்கபெறுவதுடன் அதன் சமத்துவத்தை தொடர்ந்து உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சகம் வாக்குறுதியளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் கல்வி பெறுவதை உறுதி செய்வதுடன் எந்த மாணவர்களும் அதில் பின்தங்கிடாமல் இருப்பதற்கு பல முயற்சிகள் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்