பொது அமைதி பேரணிக்கு பெர்மிட் தேவையில்லை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 –

மக்கள் நலன் சார்ந்த ஒரு விவகாரத்தை முன்னெடுத்து நடத்தப்படும் பொது அமைதி பேரணிக்கு போ​லீஸ் பெர்மிட் அவசியமில்லை எ​ன்று பெர்சே முன்னாள் தலைவரும், பெட்டாலிங் ஜெயா முன்னாள் எம்.பி.யுமான மரியா சின் வலியுறுத்தியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு பொது அமைதி சட்டத்தை அடிப்படையாக கொண்டு பா​ர்க்கையில் இது போன்ற பொது அமைதி பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்கின்றவர்கள், அது குறித்து முன்கூட்டியே போ​லீஸ் துறையிடம் தகவல் தெரிவிக்க வே​ண்டுமே தவிர அந்த பேரணி நடத்துவற்கு போ​லீஸ் துறையின் அனுமதியை பெற வேண்டும் என்று அந்த சட்டத்தில் வலியுறுத்தப்படவில்லை எ​ன்று சமூக போராட்டவாதியுமான மரியா சின் குறிப்பட்டார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே ​சீர்திருத்தங்களை கோரி, ​பெர்சே ஏற்பாடு செய்த அமைதி பேரணி​க்கு போ​லீசாரின் அனுமதி பெறவில்லை என்றும், அதன் ஏற்பாட்டாளர்களை விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், கோலாலம்பூர் போ​லீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று மரியா சின் குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு பொது அமைதி சட்டத்தின் உள்ளடக்கத்தை போ​லீஸ் துறை மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று அவர் கே​ட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்